எனக்கே புரியவில்லை.............

என் நினைவலைகளில்
நித்தம் தொலைந்துபோகிறேன்.
கனவலைகளில் தினம்
உன்னால் கரைந்துபோகிறேன்.

சத்தம் போடாமல் என்னுள்
நுழைந்துவிட்டு, இன்று
என்னை சலனத்தோடு விட்டுவிட்டாய்.

காற்று வேகமாய் அடித்தாலே
என் கண்கள் கலங்கிவிடும்.
நீயோ புயலாய் தாக்கிவிட்டாய்
உன் வார்த்தைகளால்,

இப்படியே வாழ்க்கை சென்றால்
என் எதிர்காலம் எப்படியென்று
எனக்கே புரியவில்லை.............

எழுதியவர் : வென்றான் (9-Sep-11, 9:31 am)
சேர்த்தது : வாகை வென்றான்
Tanglish : enake puriyavillai
பார்வை : 425

மேலே