வங்காள வீரன் அரவிந்த் கோஷ்
ஆங்கிலேயர் தேசத்தில்
ஆரம்பக் கல்வி கற்க
ஆறேழு வயதில் அப்பாவால்
அனுப்பப்பட்டு அம்மா அப்பா
அண்ணன் தம்பி அக்கா தங்கை
அரவணைப்பை அடியோடு இழந்து
அதனாலான விரக்தியில்
ஐந்தாறு நாட்டு மொழியில்
அழகாக புலமைப் பெற்று
ஆங்கிலேயரின் உச்சப் படிப்பில்
அசாத்திய புலமைப் பெற்று
அருந்தாய் நாட்டுக்காக
ஆங்கிலேயரின் அரசு வேலையை
அநாவசியம் என்று தூக்கி எறிந்த
அரவிந்த் கோஷ் பெயர் போற்றுவோம்
வந்தே மாதரம் இதழில் சுதந்திரம் வேண்டி
வன்மையான கருத்தால்
வாலிபர்களை வசப்படுத்தி வலம்வந்து
மிருணாளினியை கைத்தலம் பற்றி
வங்காளத்தின் சிங்கமாய் பிறந்த
புதுச்சேரியின் அடையாளமான
ஆன்மீக நேயன் அரவிந்த் கோஷை நினைப்போம்
- - - -நன்னாடன்.