அரிய வகை முடிவு வரும்
ஈரப்பதம் உள்ள இடத்தில் எதும்
எளிதில் வளர்ந்து இதம் தரும்
பதமான பதத்தில் பயணிக்க தொடங்கி
பற்றுதலோடு பகிர்ந்து பழக முயல்வோம்
நிறைய கேள்வி நிறைந்து விட்டால்
சிறந்த பாதை தெரிந்துவிடும்
அறிந்து அதை ஆட்சி செய்தால்
அரிய வகை முடிவு வரும்
தெரிந்ததால் நிறைவுக் கண்டால்
அறிந்துக் கொள்ளும் ஆவல் குறையும்
அறிந்ததால் ஆணவம் வந்தால்
அத்தனையும் அருகிபோய் அபத்தமாகும்
விதையாகவே தன்னை எண்ணி
வேதிவினையால் வாழ்வை செய்வோம்
விருட்சமாய் நம்மை எண்ணிவிட்டால்
விறுவிறுப்பான எண்ணம் உன்னில் மங்கும்.
- - - -நன்னாடன்.