காதல் னா என்னா

உருகி உருகி ஒருத்தர் மேல
அன்பு வைச்சு காதலிக்கறதா லவ்வு ..
பீச் பார்க் சுத்தறதா ...
மரத்தை சுத்தி டூயட் பாடறதா....
இல்லவே இல்லை..
அது உணர்வு ..
அது அக்கறை..
அது புரிதல்..
அது நேசம்...
அது உயிர்...

சும்மா சாதாரண
சாப்பிட்டியான்னு கேக்கற வார்த்தை கூட
லவ்வு தான்..

வெளியே கிளம்பறப்ப
பார்த்து பத்திரமா போயிட்டு வா சொல்றது கூட
லவ்வு தான்..

இன்னும் ஒரு தோசை வச்சிக்கங்களேன்
அதுக்குள்ள என்ன அவசரம் னு
செல்லமா கோச்சுக்கறது கூட
லவ்வு தான் ..

இரு சக்கர வாகன பயணத்தில்
திடீரென பிரேக் பிடிக்கும் போது
ஏங்க பார்த்துங்க னு வரும் வார்த்தை கூட
லவ் தான் ...

அந்த நாட்களில் தூங்கும்போது
வலியில் புரண்டு படுக்கும் போது
வரும் ஒற்றை ஆறுதலான வரி கூட
லவ்வு தான் ..

ஏம்மா இன்னிக்கு வீட்டுக்கு
வரப்ப பூ வாங்கிட்டு வரட்டா னு கேட்கிறது கூட
லவ்வுதான்...

இருமல் சத்தம் வந்தவுடன்
மருந்து கொடுத்து விட்டு
ஈர நைட்டியோட இருக்காதேன்னு சொன்னா கேட்டாதானே
கத்தறது கூட
லவ்வுதான்...

நமக்காக தானே இந்த மனுஷன் உழைக்கிறான் என்று அவளும்
நமக்காக தானே இவ பாவம் காலையில் இருந்து கஷ்டபடறான்னு
அவனும்
வெளிய காட்டிக்காம மனசில நினைக்கறது கூட
லவ்வுதான்...

இன்னிக்கு கட்டியிருக்கிற புடவையில
பார்க்கிறதுக்கு செமையா இருக்கேன்னு
மனசார பாராட்டறது கூட
லவ்வுதான்..

சச்சரவு நீங்க
சமாதானம் ஆன இடத்தில்
சலனம் வந்து சந்தோஷமாய் இருத்தல் கூட
லவ்வு தான்...

கடைசி காலத்தில்
யாராவது ஒருவர் விட்டு சென்ற தருவாயில்
போறப்ப என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம் இல்லன்னு
நெஞ்சுருகி அழறது கூட
லவ் தான்..

சின்ன சின்ன அன்பில் காட்டும்
அக்கறைகள் அவ்வளவு அழகு...
புரிதலோடு கூடிய அந்த எதிர்பார்ப்பில்லா காதல்
அவ்வளவு அழகு..
நம்ம வாழ்க்கை கூட
இரண்டற கலந்தது தான் காதல்..
ஒண்ணு காதலிங்க...
இல்லை
கல்யாணம் பண்ணிட்டு
கணவன் மனைவியை நேசிங்க..
ரெண்டும் ஒண்ணுதான்....
ஆக மொத்தம் காதலிங்க ..
நேசம் வைங்க..
உயிராக இருங்க..
ரொம்ப நல்லாயிருப்பீங்க
வாழ்க்கையில.....

எழுதியவர் : தீப்சந்தினி (10-Sep-19, 3:08 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 47

மேலே