கண்மூடும் ஆட்டம்

இருவருமே
ஒருவரை ஒருவர்
விழித்து பார்த்துக்கொள்ளும் அளவு
நம் சித்தம் தெளிவுற்றதாய் இல்லை
உன் வாடையில் நானும்
என் நெடியில் நீயும்
திளைத்துருகி
இருவரும் கரைந்தே
ஓர் புள்ளியென ஆகிறோம்
இருவரும் ஒன்றென ஆனபின்
இடையில் எதற்கு
இக்கண்மூடும் ஆட்டம்
நான் என்பதினை துறந்து நாமாவோம் ❤❤❤

எழுதியவர் : தீப்சந்தினி (11-Sep-19, 8:14 am)
சேர்த்தது : நிர்மலன்
Tanglish : kanmoodum aattam
பார்வை : 49

மேலே