கண்டபடி அலையாதே

அன்றொரு நாள் இதே கனவில் உன்னை வெட்டி கொலை செய்தேன் கோபத்தில்.
மீண்டும் இதே கனவில் ஏன் வந்தாய் என் அருகே நீ தாபத்தில்?
சுட்டெரிப்பேன் உன்னையே சூரியக் கதிர்கள் கொண்டு.
சாம்பலாக்குவேன் உன்னை சிவமகிமை கொண்டு.

அறிவிலியாய் இருப்போனை ஆட்டிவிப்பது போல் என்னை ஆட்டிவிக்க வந்தாயோ?
இந்த மனிதன் உனக்கு அடிமை என்று நினைத்தாயோ?
பாலுணர்வு தூண்டும் மன்மதா உன்னை அனுப்பி வைத்தவன் எவனடா?

மன்மதன் செப்புகிறான், " ஐம்புலன்கள் வழியே அலையும் மனமே! சுற்றத்திலே, இணையதளத்தினிலே, சினிமாப்பாடல்களிலே, திரைப்பட, டிவி நிகழ்ச்சிகளே, பெண்ணின் பார்வையிலே, அவள் உடையணிந்த விதத்தினிலே மனிதா நீ விழுகின்றான் என் பிடிக்குள்ளே!

அருள் நெறிகூறும் இருள் நெருங்கியது எனக்கடிமையாகிய எழுதப்படாத வரலாறுகள் பல இருக்க, நீயோ சிறுபயல் உன்னால் என்னை வெல்ல முடியுமா?

அழகு மங்கை வலியக் கண்டும் மன்மதன் என்னை நீ வென்று சென்றால் உன்னை ஆண்மையற்றவன் என்பர் உன்காதுபடவே.
காதுகளை அடைத்தாலும் வாசணை திரவியங்கள் மூக்கில் நுழைந்து மதியை மயக்கும் அப்போது நீ எனக்கடிமை. மூக்கில் தப்பினாலும் நாக்கில் மாட்டுவாய். நாக்கில் தப்பினாலும் மது பாட்டிலில் மாட்டுவாய்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Sep-19, 9:44 am)
பார்வை : 1805

மேலே