குற்றம் செய்வது யார்

பாரப்பா பழனியப்பா!
பெட்டிக்குள்ள பணத்தை பதுக்கிறான்.
கூறப்பா பழனியப்பா!
சினிமாவில் அறிவு சொன்னதெல்லாம் பணம் சம்பாதிக்கத் தானே!
பட்டினத்தாராய் வெடமிடுவார்.
அருணகிரியாய் நாடகமிடுவார்.
அவ்வழி நடப்பாரா என்றால் சத்தியமாக இல்லையப்பா.

குடு குடு குடு குடு கோடங்கி! இராத்திரி நேரத்தில் வந்து நல்ல காலம் புறக்குதுங்கிறான்.
அவன் நல்ல நிலைமையில் இருந்தாலும் ஊரு ஊராகத் தான் திரிகிறான்.
நல்ல வாக்கு சொல்லும் போதே அந்த திருஷ்டி இருக்கு, இந்த திருஷ்டி இருக்கு என்று சேவலைக் கேட்பதும் முட்டையை வாங்கி மூட்டைக்குள் வைப்பது எதற்காக? குடுகுடுகுடுகுடு சக்கம்மா வந்து இதற்கு பதில் சொல்லம்மா!

வடக்கே ஒரு ஊராம், அங்கே மூனிஷ்வரனென்று பெயராம்,
போகின்ற பக்தாள்கள் அவர் கேட்டதெல்லாம் வாங்கிட்டு போகனுமாம். கூடவே மதுப்புட்டி முக்கியமாம். பேய், பிசாசை ஓட்டுவதே பிரதானமாம்.
அங்க போய் நிமிர்ந்து நின்றால் சாட்டையடி நமக்கு விழுமாம்.
அடேய்! குடிகார மூனிஷவரா! நீ குடிக்கிறியா? உன் பெயரில் பூசாரி குடிக்கிறாரா? மனமிறங்கி வந்து சொல்லப்பா.

ம்ம், ஏய்! சாமி இப்போ மலையேறுது.
பின் இறங்கி வந்து உண்மை சொல்லுது.
ம்ம். ஏய்!
கொண்டாப்பா அந்த தீவட்டியை!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Sep-19, 10:14 am)
பார்வை : 523

மேலே