ஹட்ரோகார்பன் இட்லி நியூட்ரினோ தோசை

அண்ணே அங்க பாருங்க.
@@@@@@@@
என்னடா தம்பி?
#@@@@@@@@
அந்த உணவக விளம்பரத்தில எழுதியிருக்கிறதைப் பாருங்க.
@@@@@@
ஆமாம். சரி வா. உள்ள போயி விசாரிக்கலாம்.
@@@@@@@
(உணவகத்தின் உள்ளே)
*****************************
வாங்கய்யா. உட்காருங்க. என்ன சாப்பிடறீங்க?
@@@@@@@@
தம்பி உங்கள் தங்கம் உணவகத்தில் (Hotel) புதுரக இட்லியும் புதுரக தோசையும் கிடைக்கும்னு விளம்பரம் பண்ணிருக்கிறீங்களே, அதச் சாப்பிடலாம்னு வந்திருக்கிறோம். அதப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க.
@@@@@@@
ஹைட்ரோ கார்பன் இட்லி. நியூட்ரினோ தோசை.
@@@@###
மற்ற தோசையிலிருந்தும் இட்லிலிருந்தும் உங்க புதுரக தோசைக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம் தம்பி?
@@@@@@@@
ஹைட்ரோ கார்பன் இட்லி இளஞ்சிவப்பு நிறத்தில இருக்கும்.. மெதுமெதுன்னு சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும். வெறும் இட்லியைக் சட்டினி சாம்பார் இல்லாம சாப்பிடலாம்.
@@@#
சரி அந்த நியூட்ரினோ தோசை?
@######@@@@
அது கரும்பச்சை நீலம் கலந்த நிறத்தில இருக்கும். ஒரு நியூட்ரினோ ஒரு ஹைட்ரோ கார்பன் சாப்பிட்டாப் போதும். நாள் முழுக்க பசி எடுக்காது.
அவ்வளவு ருசியும் மணமும். இதை அறிமுகப்படுத்தியதிலிருந்து எங்க உணவுக்கு ஒரு நாளைக்கு ஐயாயிரம் பேர் ஹைட்ரே கார்பன் நியூட்ரினோ சாப்பிட வர்றாங்க. எங்களால கூட்டத்தச் சமாளிக்க முடியலங்க. நாங்க இட்டிலி தோசைங்கிற வார்த்தைகளை மறந்து ஆறு மாசம் ஆகுது.
@@@@@@@
சரி ஹைட்ரோ கார்பன் என்ன விலை? நியூட்ரினோ என்ன விலை?
@@@@@@@@
ஹைட்ரோ அய்ம்பது ரூபாய். நியூட்ரினோ எழுபத்தஞ்சு ரூபாய்.
@@@@@@@
சரி தம்பி. எங்களுக்கு ஆளுக்கொரு ஹைட்ரோ கார்பனும் நீயூட்ரினோவும் கொண்டு வாங்க.
@@@@@@
சரிங்க அய்யோ.
@@@@@@@
அண்ணே எப்பிடியெல்லாம் இட்டிலி தோசை தயாரிக்கிறாங்க பாருங்க.
@@@@@@@@
சரி. நம்ம இரண்டு வீட்டுக்கும் தனித்தனியா நாலு ஹைட்ரோவும் நாலு நியூட்ரினோவும் கட்டிக்குடுக்கச் சொல்லி வாங்கிட்டு போகணும்
@@####
அப்படியே இருக்கும் செய்வோம் அண்ணே..

எழுதியவர் : மலர் (12-Sep-19, 11:42 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 90

மேலே