முகிலின் நிறத்து அழகி
சிறு இதய அறையில்
நீ புகுந்து வசிக்க - அதில்
சீறிப்பாயும் குருதி
சிலிர்ப்பை உடலுக்கு அளிக்க
பரவசத்தால் மனமோ
பலத்தை கூட்டி வளர்க்க
பல வண்ண மயிலாள்
பார்வை என்னை மயக்க
நெற்றியில் சுருண்ட குழலோ
நெடிய காற்றால் அசைய
குளத்தில் தோன்றும் குமிழாய்
கன்னக் குமிழ்கள் அழைக்க
அந்திப் பொழிதில் தோன்றும்
முகிலின் நிறத்து அழகி
முழுதாய் கவர்ந்துச் சென்று
முக்காலந்தோறும் விக்கலைத் தந்தாளே.
---- நன்னாடன்.
நிறத்து அழகி
சிறு இதய அறையில்
நீ புகுந்து வசிக்க - அதில்
சீறிப்பாயும் குருதி
சிலிர்ப்பை உடலுக்கு அளிக்க
பரவசத்தால் மனமோ
பலத்தை கூட்டி வளர்க்க
பல வண்ண மயிலாள்
பார்வை என்னை மயக்க
நெற்றியில் சுருண்ட குழலோ
நெடிய காற்றால் அசைய
குளத்தில் தோன்றும் குமிழாய்
கன்னக் குமிழ்கள் அழைக்க
அந்திப் பொழிதில் தோன்றும்
முகிலின் நிறத்து அழகி
முழுதாய் கவர்ந்துச் சென்று
முக்காலந்தோறும் விக்கலைத் தந்தாளே.
---- நன்னாடன்.