ரேனுஸ்ரீ-பகுதி 15

அனைவருக்கும் வணக்கம்,
அம்முவுடன் சேர்ந்து பொறுமையுடன் 4 ஆம் பகுதி முதல் 14 வது பகுதிவரை ரேனுஸ்ரீயின் flashback கை கேட்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நானும் அம்முவும் சந்தையின் அருகில் இருந்த ஒரு அரசமரத்தடி கோவிலில் அமர்ந்திருந்தோம்.
நான் கூறிய அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தால் அம்மு.
நான் ஸ்ரீயை பற்றி கூறி முடித்து அம்முவை பார்த்தேன்.
அவள் எதையோ யோசித்தபடி ஓர் பெரு மூச்சுடன்"இப்ப ஸ்ரீ எங்க இருக்காருன்னு தெரியுமா?"என்று கேட்டால்.

சலிப்போடு இல்லை என்று தலையாட்டினேன்.

"ஸ்ரீ விஷயத்துல என்ன செய்றதா இருக்க?"என்று கேட்டால்.

"என்ன செய்றதா இருக்கேனா!?,நா என்ன செய்யனு!"என்று கேட்டேன்.

அவள் என்னை ஆச்சிர்யத்தோடு பார்த்தபடி கோவமாக "பிசாசே!,நீ அவன விரும்புறதான,உனக்கு ஸ்ரீ வேணுதான,அதுக்காக நீ என்ன ஸ்டேப்(step )எடுத்த,ஸ்ரீ எங்க இருக்கானாவது தெருஞ்சுக்கு முயற்சி செஞ்சியா"என்று கேட்டால்.

"வேறு ஸ்ரீன்ற பெற மட்டு வெச்சுக்கிட்டு என்ன எங்க போய் தேட சொல்ற?,சரி அப்படியே தேடி கண்டு பிடுச்சாலு அவன் கிட்ட போய் என்னனு சொல்ல சொல்ற?,அவன் கிட்ட போய் எட்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ப ரெண்டு பெரு ஒருத்தர ஒருத்தர் விரும்புனோ ஆனா நம்ப ரெண்டு பெரு பேசிக்கிட்டது கூட இல்ல,தினமு தூரத்துல இருந்து ஒருத்தர ஒருத்தர் பாத்துப்போ,திடிர்னு ஒரு நாள் நீ சொல்லாம கொள்ளாம ஊற விட்டு போயிட்ட ஆனாலு நா லூசு மாரி உன்னையே நெனச்சுட்டு இருக்கனு சொல்ல சொல்றியா?" என்றேன்.

"Not bad actually ,யாருக்கு தெரியு நீ இந்த மாரி சொன்னினா உன்னோட வித்யாசமான அப்ரோச் பிடுச்சு போய் அவன் உன்ன ஏத்துக்கிட்டாளு ஏத்துக்களா"என்றால்.

சலிப்போடு அவளை பார்த்தேன்.

"என்ன பாக்கற?எதுவுமே செய்யாம உட்கார்ந்து இருக்குறதுக்கு,ஏதாவது செஞ்சு அது கிறுக்குத்தனமா போனா கூட பரவாயில்ல"என்றால்.

"புரியாம பேசாத அம்மு எட்டு வருஷ ஆச்சு,அவனுக்கு என்ன நியாபகம் இருக்குதானு கூட தெரில,யாருக்கு தெரியு இப்ப அவன் வேற யாரானா கூட விரும்பிட்டு இருக்கலா!,ஸ்ரீ என்னோட லைப்
(life )ல இல்லனா கூட பரவா இல்ல ஆனா அவன திரும்பவு பிரியற சக்தி எனக்கு இல்ல அம்மு.
அது மட்டு இல்ல ஸ்ரீய எனக்கு பிடிக்குதா ஆனா அவன விட எ அப்பாவ எனக்கு ரொம்ப பிடிக்கு,எ அப்பா கிட்ட போய் எனக்கு நானே மாப்பிள பாத்துக்கிட்டனு சொல்ற தைரியோ எனக்கு இல்ல"என்று வலியோடு கலங்கிய கண்களுடன் கூறினேன்..

அம்மு கவலையோடு என்னை அவள் தோல் மீது சாய்த்து அனைத்துக்கொண்டால்.
"ஒரு வேல எப்பனா உன்னோட மனசு மாறுனா சொல்லு ஓ கூட சேர்ந்து ஸ்ரீய தேட நா ரெடியா இருக்க"என்று கூறினால்.

நான் அவளை பார்த்து புன்னகித்துவிட்டு"எனக்கு ஒரே ஒரு ஆசதா சாகரத்துக்குள்ள ஸ்ரீய ஒரே ஒரு முறையாவது பாக்கணு"என்று கூறி மீண்டும் அவள் தோல் மீது சாய்ந்தேன்.
அப்போது என் மடிமீது அரசமர இழை ஒன்று விழுந்தது,அந்த இலையின் நுனி மட்டும் பொன் நிறத்தில் இருந்தது,அதை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

அம்மு அவள் தலையை என் தலை மீது சாய்த்து என் கன்னத்தை அன்போடு வருடினாள்.
பின்பு அதிர்ச்சியோடு"ஹே,என்ன ஓ உடம்பு இப்படி சுடுது,காலில டேப்லெட்(tablet ) எடுத்தியா இல்லையா"என்று கேட்டால்.

"ஓ..,அது,மறந்துட்ட.."என்றேன்.

"நேத்து நைட்டு டேப்லெட் எடுக்கல இன்னைக்கு எடுக்குலன்ர அப்ரோ எப்படி சரி ஆகு பாரு போன பிவேர்( fever )திருப்ப வந்துடுச்சு"என்றால்.

"டென்சன்(tenson ) ஆகாத,நா நல்லா தா இருக்க"என்றேன்.

அவள் கவலையுடன் சலித்துக்கொண்டபடி அவள் கை கடிகாரத்தை பார்த்தால்.
"OMG ,it 's 2 pm ,கிளம்பு போகலா" என்றால்.

"ம்ம்.."என்று தலையை ஆட்டியபடி எழுந்தேன்,வெகு நேரம் அமர்ந்திருந்தாள் என் கால்கள் மறுத்திருந்தது அதனால் சரியாக நிற்க முடியாமல் தடுமாறினேன்.

"என்ன ஆச்சு"என்று கேட்டால்.

"காலு மறுத்துடுச்சு,முடில..,என்றேன்.

"சரி சரி,மெதுவா போல ஒன்னு அவசரோ இல்ல,கால நல்லா ஓதரூ"என்றால்.
அம்முவின் தோலை பிடித்தபடி கால்களை அசைத்து கொண்டிருந்தேன்.

"ரேணு"என்று அழைத்தால் அம்மு.
"ம்.."என்றேன்.
"சாரி(sorry )"என்றால்.
"எதுக்கு சாரி?"என்று கேட்டேன்.
"இல்ல உன்னோட விருப்பத்த தெருஞ்சுக்காம நா விரும்புற பையன்னோட மனசு கஷ்ட படக்கூடாதுன்றதுக்காக உன்ன உதய லவ் பண்ண சொல்லி சொன்னது ரொம்ப தப்பு,நா ரொம்ப செலிபிஷா(selfish )நடந்துகிட்டு"என்றால்.
நான் அவளை பார்த்து புன்னஹித்து விட்டு"அது பரவா இல்ல,இன்னைக்காவது உதய்ய விரும்புற விஷயத்தை சொன்னியே!,இல்லனா எனக்கு தெரிஞ்சே இருந்திருக்காது "என்றேன்.
நான் கூறியதை கேட்டு அம்மு புன்னகித்தால் நானும் அவளை பார்த்து புன்னகித்தேன்.

"அம்மு தோண்ட ரொம்ப ட்ரை (dry )ஆனா மாரி இருக்கு தண்ணி வேணு"என்றேன்.
"இங்க தண்ணிக்கு எங்க போறது!?,அது மாட்டு இல்ல கண்டா தண்ணிய குடுச்சுட்டு இன்னொ ஜோரோ அதிகமாகறதுக்கா,வா போற வழில மினரல் வாட்டர் வாங்கித்தர"என்றால்.
"அப்ப சாப்பாடு!"என்றேன்.
அவள் சலித்துக்கொண்ட படி"அதுவோதா"என்று கூறி என் கையில் இருந்த அனைத்தையும் வாங்கி கொண்டால்.
"பரவா இல்ல குடு நா எடுத்துட்டு வர"என்றேன்.
"சும்மா வரியா,உன்னையே ஒருத்தர் தூக்கிகிட்டு வரணு போல இருக்க,இதுல மேடம் எல்லாத்தையு தூக்கிட்டு வரங்களா"என்று கேலியாக கூறினால்.
பின்பு இருவரும் வண்டி(scooty ) நிறுத்த பட்ட இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
அப்போது அம்மு என்னிடம் "ஒரு வேல என்னைக்காவது ஸ்ரீய பார்த்த என்ன செய்வ"என்று கேட்டால்.
சில நோடிகள் யோசித்தபடி அவளை பார்த்து"தெரில"என்று கூறி எதிரே பார்த்தேன்.

என் எதிரே 2 மீட்டர் தொலைவில் ஸ்ரீ போல ஒருவன் நின்று கொண்டிருப்பதை பார்த்தேன்.
உற்று பார்த்த போது என் எதிரே இருப்பது ஸ்ரீ என்று தெரிந்தது, அவன் ஒருவனிடம் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தான், எட்டு வருடத்திற்கு முன்பு பார்த்த அதே முகம்,அவன் முகத்தில் தாடி,மீசை என எதுவும் இல்லை,பார்ப்பதற்கு வட இந்தியனை போல இருந்தான்,நல்ல உயரமும் கூட,அவன் நிறத்திற்கு ஏற்றது போல ஜீன்ஸ் பண்டும் (jeans pant ),லைட் பிங்க் காலர் டீ ஷிர்ட்டும்(pink collar T -shirt )அணிந்திருந்தான்,அதே கருமையான,மென்மையான முடி,மற்றவரை துளைத்து போக செய்யும் துளையாத அதே புன்னகை.
அவனை கண்ட நொடி முதல் என்னால் என்னை சுற்றி நடக்கும் எந்த விஷயத்தையும் உணர முடியவில்லை,என் கண்களுக்கு அவன் மட்டுமே தெரிந்தான்,எதை பற்றியும் யோசிக்க முடியவில்லை,அசைய கூட முடியாமால் அவனையே பார்த்தபடி நின்றிருந்தேன்.

அப்போது ஸ்ரீ அந்த இடத்தை விட்டு செல்ல ஆரம்பித்தான்,செய்வது அறியாது தவித்து பார்த்தபடி இருந்தேன், அவன் என் கண் பார்வையில் இருந்து தூரம் செல்ல செல்ல எனது இதைய துடிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது,அவனை பார்த்துக்கொண்டிருக்கையில் திடீர் என ஒரு கும்பல் நடுவே வந்து,அவர்கள் அங்கும் இங்கும் நடமாடி கொண்டிருந்தனர்,என்னால் ஸ்ரீயை சரியாக பார்க்க முடியவில்லை,அவன் தலை மறைவது போல இருந்தது.

இப்பொழுது விட்டு விட்டால் இனி ஸ்ரீயை எப்பொழுதும் காண முடியாது என்றும் இனி அவன் என் வாழ்க்கையில் வர மாட்டான் என்றும் தோன்றியது,நின்று கொண்டிருந்த நான் என்னையே அறியாது ஸ்ரீயை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.

தொடரும்....

எழுதியவர் : அனுரஞ்சனி (14-Sep-19, 1:27 am)
சேர்த்தது : அனுரஞ்சனி மோகன்
பார்வை : 109

மேலே