மனிதம் எங்கே போனது
செருப்பில்லாமல் நடந்தோம்...
ஆற்று நீரை பருகினோம்
குறிப்பிட்ட உணவைதான்
உண்ணவேண்டும்...என சாப்பிட்டதில்லை...
பழைய சோறுதான்
பசி போக்கியது...
பசிக்காக சாப்பிட்டோம்...ருசிக்காக அல்ல
பல மைல் தூரம் நடந்துதான்
பள்ளி சென்றோம்..
வெட்ட வெளியில்தான் கழித்தோம்
வேப்பமர நிழலில்தான் உறங்கினோம்
அப்பா,அம்மா வரும்வரை
பக்கத்து வீட்டில்தான் விளையாண்டோம்
மனிதர்கள் மனிதர்களாகத்தான்
இருந்தனர்...
ஆனால் இன்று அனைத்தும் செத்துவிட்டது...