பூ முடிக்கும் புன்னகையே

பூ முடிக்கும் புன்னகையின்
கரம் நான் புடிக்கப் போனேனே.!
நார் எடுக்கும் வாழைத் தோப்போரம் .!
தான் காத்து நின்றேனே.!

தேன் சுரக்கும் பூக்களோடு
தேவதை அவள் வந்தாளே.!
நான் சுவைக்கும் இதழ் மேலே
சாயம் போட்டு நின்றாளே.!

மை தீட்டிய விழியால் நேருக்கு
நேர் நோக்க மறுத்தாளே.!
கொலுசு போட்ட பாதத்தால்
கோலம் போட்ட படியே இருந்தாளே.!

பூலாங்கிழங்கோடு மஞ்சள் போட்டு
மெருகூட்டிய வெண் கன்னம் சிவக்கும்
வண்ணம் வெட்கம் கொண்டாளே.!
புழுதிக் காட்டை உழுது விதைத்த நாணல் போல் தலை சாய்த்துக் கொண்டாளே.!

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Sep-19, 8:15 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 79

மேலே