இசைமன்றமோ உன் முகம்

பாயும்நதி பாடலின்
பல்லவி
ஆடும் அலைகள்
அதன்ராகம்
துள்ளும் கயல்கள்
தாளம்
இந்த அழகுகள்
அரங்கேறும் இசைமன்றமோ
உன் முகம் ?

எழுதியவர் : கவின் சாரலன் (14-Sep-19, 9:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே