ஓடி வந்த மாப்பிள்ளை

தொங்கிய தலையுடன் சோகமாக புதுமாப்பிள்ளை தனியாக பெற்றேரைப் பார்க்க வருகிறார்.

ஏன்டா மகனே தனியா வர்ற. வள்ளியைக் கூட்டீட்டா வரல.

அவ வள்ளி இல்லம்மா. கள்ளி. கள்ளிச்செடி. எதையாவது சொல்லி குத்திக் காட்டிட்டே இருக்கிறா. நான் மறுவீடு போன அன்னிக்கே என்னைய பண்ட பாத்திரங்களக் கழுவ வச்சாடா. மாமனார் மைத்துனர்கள் யாருமே அதக் கண்டுக்கில. என்ன சமைக்கவும் சொல்லிட்டா.

நீ தான் எனக்கு சமைக்கக் கத்துக் குடுக்கலயே..
நான் சமைச்சத சாப்பிட்டுட்டு திட்டிட்டே மொத்த ஆரம்பிச்சுட்டா. மரியாதைக் குறைவா 'வாடா, போடா, அவனே, இவனே'ன்னு என்னைத் திட்டினா.

"உன்னை எப்பிடிடா வளத்தாங்க. சமைக்கத்தெரியாத கம்மனாட்டி"ன்னு திட்டிட்டே எங் கன்னத்திலே அறைஞ்சா."உனக்குப் பேருதான் வீட்டு மாப்பிள்ளை. எங்களப் பொறுத்தவரை நீ எங்க வீட்டுச் சமையல்காரன்தான்டா. அதுமட்டுமா வீட்டு வேலையெல்லாம் நீ தான் செய்யணும். வேலைக்காரியும் நீ தான். சமையல்காரனும் நீதான். எடுபிடியும் நீதான்டா"ன்னு சொல்லிட்டே இன்னொரு கன்னத்திலும் பலமா ஒரு குத்து விட்டாமா.
என்னை எல்லா வேலையும் கத்துட்டு ஒருவாரத்தில் வந்து சேரணும்னு முதுகில ஒரு குத்தவிட்டு அனுப்பிட்டாம்மா.

என்னை எதுக்கு வீட்டு மாப்பிளாளயா அந்த ராட்சசிக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க?

மகனே மணிமாறா, வசதியான எடம். உன்னக் கண் கலங்காம பாத்துக்குவாங்ன்னு நம்பித்தான் உன்னை வீட்டு மாப்பிள்ளையா வள்ளிக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்.

ஒரு வாரத்தில உனக்கு வீட்டு வேலையெல்லாம் கத்துத் தர்றேன். நீ அங்க போயி நல்லபடியா சமைச்சு வீட்டு வேவையெல்லாம் செஞ்சு வள்ளிகிட்ட நல்ல பேரை வாங்கிட்டு சந்தோசமா இருக்கணும்.

பயமா இருக்குதம்மா.

நீ ஆம்பளச் சிங்கம்டா. பயப்பட்டு கண்ணீர் விடக்கூடாது. உன்னப் பெத்த தாயாகிய என்னோட மனசு தாங்காதுடா மணி.

சரிமா நான் ஒரு வாரத்தில எல்லா வேலையும் கத்துகிட்டு மனசையும் தேத்திக்கிறேன்

எழுதியவர் : மலர் (16-Sep-19, 1:29 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 160

மேலே