காதல் சொல்லாதே
இனி காதல் சொல்லாதே
காதல் என்றொன்றே உலகில் இல்லை என்றாள்,
ஒவ்வோர் முறையும்
ஒவ்வோர் அர்த்தம் தருவாள்
எல்லாம் நாடகம்,
ஈர்ப்பின் விளைவு,
நீர்த்துப்போகும் சுவாரஸ்யம்,
உடல் தேடல்.
பின்பொருநாள்
நீ சொன்னது சரிதான்
காதல் என்றொன்றே உலகில் இல்லை என்றேன்
திரும்புமென்னை நிறுத்திச் சொன்னாள்
ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம்
யாருக்குத்தெரியும்?
மறுத்துக்கொண்டே இருப்பவள் கூட
புறக்கணிப்பை எதிர்கொள்ள பரிதவிக்கிறாள்,
அவளுக்கு யாராலாவது காதலிக்கப்பட வேண்டும்
எனக்கு யாரையாவது
காதலித்துக்கொண்டிருக்க வேண்டும்.