காதல்
உன்னைப் பார்த்தேன் உன் அழகை
அதற்கு கவிதையில் மாலைச் சூட்டலாம்
என்று நினைத்தேன் சொற்கள் வரவில்லை
என் கை விரல்கள் முந்தி கொண்டன
ஒரு துகிலில் மை கொண்டு
நான் கண்டு ரசிக்கும் உன்அழகிற்கு
வடிவு தந்தேன் , இதோ என்முன்னேநீ
என்னருமை காதலியே நான் வரைந்த
ஓவியத்தில் உயிர்கொண்டு என் முன்னே
உயிர் ஓவியமாய், காதல் ஓவியமாய்