சிலையில் கடவுள்
கோயிலுக்கு சென்றேன்
கூட்டம் இல்லாத நேரம்
நானும் கல்லில் வடிக்கப்பட்ட
கடவுள் சிலையும்
கண்களை மூடினேன்
வேறெதையும் பார்த்து
மனத்தைக் குழப்பிக்கொள்ளாமல் இருக்க
த்யானத்தில் ஆழ்ந்துவிட்டேன்
கற்சிலையை கடவுள் என்றேன்
மனதிற்கு …..நான் வேண்டியதெல்லாம்
நீதான் நான் தேடிய கடவுள்
எனக்கு தரிசனம் தருவாயா
மனதில் வேறு எண்ணங்கள் இல்லை
மெய் மறந்தேன் , என்னை மறந்தேன்
என்னை உணர்ந்தேன் அப்போது
எப்போது என் இறுகிய மனம்
கனம் இல்லாது தென்றலாய்
என்னை வருடியபோது
வருடிய தென்றல்……
நான்தேடிய கடவுள்
சிலைக்குள் ஒளிந்திருக்கும்
கண்ணுக்கு புலனாகா சக்தி
மனக்கண்ணுக்கு புலனானது
என்னுள் ஓர் இதம் பேரின்பம் ...
கல்லும் கடவுளே அறிந்துகொண்டால்
மனம் தெளிவானது
நான் கடவுள் பக்தன்