பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கவி

பிரதமர் மோடிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கவி

நீதான் உண்மையில்
வெண் தாடி வேந்தன்
வெண் தாடியும் இருக்கிறது
நாட்டை ஆளும்
வேந்தனும் நீதான்

உன் நேர்மை
கண்டு நாட்டு மக்களெல்லாம்
பூக்களைத் தூவினார்கள்
தமிழ் நாட்டு மக்கள் மட்டும்
வெறுப்புக்களைத் தூவினார்கள்

தன் மீது நெருப்புக்களை
தூவிக்கொள்கிறோம்
என அறியாமல்

பூக்களை நேசிக்கும்
பருவத்தில்
நீ மக்களைப் பற்றி
யோசித்தாய்

நீ அணியும் காவி
காவி அல்ல
இந்திய முன்னேற்றத்தின்
சாவி

நீ தாமரையை
நாடெங்கும் மலரவைத்த
சூரியன்

நீ ஒரு தமிழ்ச்சியை
ஆளுநராக்கி அழகு
பார்த்த இந்தியன்

நீ ஜனாதிபதி
ஆக்கியது யாரை
அண்ணல் அம்பேத்காரை

இவையெல்லாம்
அறியா ஜனம்
உன் உண்மையான
உழைப்பிற்கு
நீ எங்கு சென்றாலும்
உனக்கே அறியாசனம்

திரியனையில் ஏறிய
தீபம் ஒளி தருவதுபோல்
நீ அரியணை ஏரியபோதே
இந்தியா வெளிச்சம்
பெற்றது

நீ உறங்கும் பாய்
வாஜ்பாய்

நீ இந்த மண்ணைக் காக்க
பெண்ணைத் துறந்தவன்

மாசற்ற மாணிக்கமே
நீ கண்ணசைத்தால்
சுற்றும் உலகம் நிற்குமே

தமிழகத்தின் குளம்
எல்லாம் தூர்
உன் கடைக்கண்
பார்வையை இங்கே
பார்
அத்தூரை சீக்கிரம் வார்
2021 ல் இங்கே நடக்கும் வார்
அதில் 234 தொகுதியையும்
நீயே வார்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயவரே

கவிஞர் புதுவைக் குமார்
நிறுவனர்
உலக கவிஞர் சங்கமம்

எழுதியவர் : புதுவை குமார் (17-Sep-19, 9:33 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 56

மேலே