வடை மெது வடை
வடை மெதுவடை
சட்னி சாம்பார் அதன் சைட் டிஷ்
இட்டிலியோ தோசையோ
தட்டில் வைத்தால்
நட்புக்காக நண்பனாக வந்து அமர்வான்
தயிருடன் சேர்ந்தால் தயிர்வடை ஆவான்
சாம்பாருடன் சேர்ந்து சாம்பார் வடையாவான்
ரசத்துடன் சேர்ந்து ரசவடையாவான்
சமையலறை நீர் டிஷ்ஷுடன் கூட்டணி அமைத்து
புதுப்புது சுவை தருவான்
பாயாசத்துடன் துணைநின்று தெய்வத்தின் நிவேதனைப் பொருளாவான்
அனுமார் பைரவர் மார்பினில் அஞ்சாமல் மாலையாகி அலங்கரிப்பான்
ஓட்டை அவனது குறைபாடு இல்லை
மனிதா உனக்கு ஓட்டை ஒன்பது எனக்கோ ஒன்று என்ற அவனது ஞான தத்துவம்
வெளியிலே வைத்திருந்தால் ஊசிப் போவான்
ஃ பிரிட்ஜில் வைத்தால் இன்னும் சிறிது நாள் வாழ்வான்
தெருவோர ஹோட்டல்களில் எத்தனை முறையானாலும் சளைக்காமல்
புதுப் பொலிவுடன் வெந்து வருவான்
வடை மெதுவடை காக்காய் பாட்டுப்பாடி ஏமாந்த வடை
சுட்டு விரலில் சொருகி சுவைத்துப் பாருங்கள்
சுதர்சன சக்கரமாக நீங்கள் சுழன்று வருவீர்கள் !