முடிவில்லா தொடர்கதை நீயும் நானும்
உன் அழைப்பு மணி
எனை அழைக்காத வரையில்...
என் வாழ்வில் நீ இல்லை என
சொல்லி..
இதயத்தில்
முற்றுப்புள்ளியாய்
ஒற்றைப்புள்ளியை.
வைக்கிறேன் நான்.....
நீயோ ..!!
கண்ணெதிரே நின்று கொண்டு
ஒற்றைப்புள்ளியையும்
முற்றுப்பெறாமல்
தொடரும்......... புள்ளியை
வைத்து... இரு விழியாலே சொல்கிறாய்..
நீயும் நானும் முடிவில்லா தொடர்கதையே என்று.....