நான் காத்திருக்கத்தான் வேண்டும்
காற்றே உன்னோடு நான் காதல் கீதம் பாடவேண்டும்
கனவே உன்னோடு நான் இரவும் பகலும் நடக்க வேண்டும்
மலரே உன்னை நான் தினம் வந்து ஸ்பரிசிக்க வேண்டும்
வானவில்லே உன் வண்ணங்களை என் மீது பொழிய வேண்டும்
நிலவே நீ தேயாத வரம் பெற்று வரவேண்டும்
அந்தி வானமே அவள் வரும் வரை காத்திருக்க வேண்டும்
அப்படி வரவில்லை என்றால் அவளை அழைத்து வந்து விட்டு
நீங்கள் good bye சொல்ல வேண்டும் !
அவள் வரவில்லை என்ன செய்வது விடியும் வரை நான் காத்திருக்கத்தான் வேண்டும் !