அவள் வருவாளா

தென்றல் வந்து
தலையைக் கோதி
ஏன் சோகம் என்றது ?
இதள்களால் எக்காளம்
புரிந்தாள்
விழிகளால்
வேடிக்கை காட்டினாள்
மண்டியிட்டுக்
கிடக்கிறது மனம்
அவளுக்காக
ஓடி மறைந்தாள்
தேடி அலைகிறேன் என்றேன் !
கவலை கொள்ளாதே
தூது சொல்கிறேன்
சேதி சொல்கிறேன் என்று
நக்கல் பார்வையுடன்
நகர்ந்து சென்றது
நையாண்டிக் காற்று
அவள் வருவாளா ?
மனமே கலங்காதே
நம்பிக்கை தானே
வாழ்க்கை !

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (21-Sep-19, 11:18 am)
பார்வை : 218

மேலே