புலன்களை அடக்கினால் நீயும் புத்தனாகலாம்
அவன் ஒரு 'தீர்க்க தரிசி'
நானும் அவன்போல் மனிதனே,
ஆனால் நான் 'தீர்க்க தரிசி' அல்லேன், ஏன்
என்னுள்ளம் என்னைக் கேட்டது ……
அவன் எப்படி தீர்க்க தரிசி நான் ஏன்
உள்ளதைக் கேட்க, உள்ளமது சொன்னது
உனக்கு தெரியும் அவன் தன்
ஐம்புலன்களையும் அடக்கி கையில்
வைத்திருப்பவன் ……. புலன் அடக்கியவன்
விண்ணையும் மண்ணையும் ஆள
பிறந்தவன் நாளை நடப்பதை
இன்றே மனக்கண்முன் பார்ப்பவன்
ஞானி….. தீர்க்க தரிசி…. அவன்
ஏன் நாவையே இன்னும் அடக்க
முடியா நான்.... ஏன் தீர்க்க தரிசி இல்லை
என்பது இப்போது புரிந்தது .....
அவன் ஏன் தீர்க்கதரிசி என்பதும்
'புலன்களை அடக்கினால் நீயும்
ஓர் புத்தனாகலாம் '