அனுபவம் கற்றுதரும் பாடம்

இது என்ன உலகம் டா
நீ என்ன செய்தாலும்
உனை குறைதான் சொல்லுண்டா
நீ யாரிடம் அழுதாலும்
உன் குறை நீங்காதுடா
சுயநலம் மிக்கது
இன்னிக்கு மனித மிருகம்தான்!

இல்லையென்று ஏங்காமல்
இருப்பதை வைத்து வாழுடா
யாரையும் குறை கூறாமல்
உனக்கானதை நீயே தேடுடா
சிறுகுறைகள் ஏதுமின்றி
இங்கே யாருமில்லை
உன் முயற்சிகள் தவறலாம்
நீ முயற்சிக்க தவறாதே
என்று சொன்னதேன்
ஐயா அப்துல் கலாம்
கலாம் கண்ட கனவைப்பார்
அதெல்லாம் வெற்றிதான்

எதற்காகவும் தயங்காதே
எதைக்கண்டும் நீ மயங்காதே
யார் என்ன சொன்னாலும்
எல்லாத்தையும் நம்பாதே
ஊர் ஒன்றாய் நின்றாலும்
அதற்காக நீ அஞ்சாதே
நகர்ந்து கொண்டே இரு
தினமொரு பாடம் கற்றபடி
எவ்வளவுதான் நீ படித்தாலும்
அனுபவம் தரும்பாடத்தை
வேறு எதுவும் கற்று தராதுடா
எத்தனை கால்கள் தடுத்தாலும்
நம்பிக்"கை" இருந்தால் போதுமடா
ஊன்றி எழுந்து வாழ்ந்திடலாம்!
எதையும் எதிர்பார்த்து வாழாதே
எதையும் எதிர்கொள்ள தயங்காதே
துணிந்து எழுந்திட்டால்
உன்னை வெல்ல யாருமில்லை!

எழுதியவர் : கிச்சாபாரதி (22-Sep-19, 6:45 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 166

மேலே