ஆசைய காத்துல தூது விட்டேன்
ஆத்திலே தூண்டில் போட்டு /
அதிலே ரெண்டு மீன் புடிச்சு /
விரைவாகக் கொண்டு
வந்து ---சின்னையா /
அளந்து துண்டு போட்டு
ஆக்கிப்புட்டு/ ஆசையோடு
காத்திருக்கேன் ---சின்னையா/
அந்தத் தெற்கோரக் காத்தக்
கொஞ்சம் நீ---- கேளைய்யா /
வடக்கோரத் தோப்புக்குள்ளே
வடுமாங்காய் பறித்து வந்து --சின்னையா /
நடைபாதையோரத்தில் பழுத்த
மிளகாயும் திருடி வந்து/ காரப்பச்சடி செஞ்சுப்புட்டேன் ---சின்னையா /
காதோரம் சேதி சொல்லும்
தென்றல் இதைச் --சொல்லலையா ?
குளத்து நீரில் குளித்து வந்து /
கூடை நிறையவே முல்லைப் பூ பறித்து /
மணக்க மணக்க கோர்த்தெடுத்து /
மகிழம்பூக் கொண்டை போட்டு /செரிகிக்கிட்டேன் --சின்னையா /
நாளாபக்கமும் சுழண்டு வரும் /
நறுமணத்தைக் கொண்டு வரும் /
மேக்கு நோக்கி வீசும் தென்றலது
என் ஏக்கமதைக் கூறலையா? நீ சொல்லையா -?----என் சின்னையா /