பிள்ளை பெறாமலே தாயானவள்

முதன் முதலில் நான் எழுதிய சிறுகதை இதுவே. தலைக்கு மேல் வளர்ந்த தம்பியையும் குழந்தை போல பார்த்துக்கொள்ளும் அத்தனை அக்காக்களுக்கும் சமர்ப்பணம்...

எனக்கு அப்பவே தெரியும்.இதெல்லாம் எங்க உருப்புட போகுது. (சொந்த பந்தங்கள்)
அவனோ சூழ்நிலை சரியில்லாமல் தனிமையில் புலம்பிக் கொண்டு இருந்தான்.ஏய் ஏன்டா அழுகுற? என்னடா ஆச்சு? சொல்லுடா அக்கா கேக்குறேன்ள. ஆம்பள புள்ள இப்படி அழுகலாமா?அவனுக்கு அவள் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தாள்.இவனுக்கோ வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருத்திக்கொண்டே இருந்தது.ஆனால் இவனோ நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன்.ஏழையாய் பிறந்திருந்தால்கூட அவன் எண்ணம் ஏழ்மைத்தனமாகவே இருந்திருக்ககூடும்.

அவன் தனிமையை விரும்பக் கூடியவனாக இருந்தான். யாரிடமும் அதிகமாக பேசமாட்டான்.பெற்றவர்களிடம் கூட அதிகமாக பேசமாட்டான்.வீட்டில் அவன் என்ன செய்தாலும் அவனை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.வெளிமாநிலத்துக்கு விளையாட்டு போட்டிகளுக்கு செல்ல பணம் கேட்டால் கூட நம்மிடம் அவ்வளவு வசதி இல்லை மேலும் நீ அங்கு போய் தோற்கத்தான் போகிறாய் என்று அவனை நம்பிக்கை இழக்கவே செய்வார்கள்.

இவனுக்கு அக்கா என்றால் ரொம்ப பிரியம். ஆனால் இவனுக்கோ கூடப் பிறந்த அக்கா இல்லை. பள்ளியிலும், டியுசன் சென்டரிலும் இவனிடம் அக்காக்கள் பலர் அன்புக்கொண்டிருந்தனர்.கூடப் பிறந்த அக்கா இல்லாத்துக்கு இவ்வளவு அக்காக்களா என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வான்.

அவ் அக்காக்களிடம் காரணமின்றி சண்டைப் போட்டு அவர்களை அழுகவைப்பதில் இவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி.அழுக விடுவானே தவிர ஒருபோதும் அவர்களை விட்டுக்கொடுத்தது இல்லை.அவர்களும் இவன் என்னதான் அழுகவிட்டாலும்,மனக்கஷ்டத்தை கொடுத்தாலும் இவன் மீது இருக்கும் அன்பு ஒரு துளியும்,ஒரு போதும் குறைவதில்லை.

"மனைவி அமைவது எல்லாம் வரம்" என்பது போல எனக்கு "அக்காக்கள் அமைந்தது எல்லாம் வரம்" என்று தன் சக நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பான்.

"சொந்தங்களை நம்புவதற்கு பதிலா இவ்வாறு வெளியாட்களை நம்புவது எவ்வளவோ மேல் போல"

என்று நினைத்து பல நேரங்களில் இவன் நகைதலுண்டு.பள்ளிப் படிப்பை முடித்தபிறகு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்புகிறான்.அவன் எதிரே ஒரு கிறிஸ்துவ குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர்.அக்குடும்பத் தலைவர் இவனிடம் பேசத்தொடங்கினார்.இவனுக்கு ஆங்கில இலக்கணம் சிலவற்றை கற்பித்தார்.பின்பு அவர் தனது மகளையும் இவனையும் ஆங்கிலத்தில் உரையாட சொல்கிறார். இவன் மனதில் அவளுக்கும் இவனுக்கும் ஒரே வயசுதான் போல என்று எண்ணுகிற வேலையில் அவளுடைய தாய் உனக்கு ஏதாவது உதவி என்றால் எங்களிடம் கேளு என்று அவள் மகளின் அலைப்பேசி எண்ணை கொடுக்க சொல்கிறாள்.
(இவன் வெளியூர் என்பதால்)

"தம்பி எந்த உதவினாலும் அக்காட்ட கேளுடா"
எது தம்பியா அப்ப இதுவும் அக்காவா என்று மனதுல்லே நகைக்கிறான்.பின்பு வழக்கம் போல் இவளிடமும் காரணமின்றி சண்டைப் போட்டு அழுகவிடுகிறான்.

பிறகு, வீட்டில் கல்லூரி சேர்ப்பதைப் பற்றி பேசத்தொடங்கினார்கள். வழக்கம் போல் இவனிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை.இவனுக்கு பிடிக்காத படிப்பில் சேர்த்து விடுகிறார்கள்.இதற்கிடையில் இவனது பெற்றோர்களிடையே பெருஞ் சண்டை.இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.ஏற்கனவே பிடிக்காத படிப்பில் சேர்த்துவிட்டார்கள் என்று வேதனையில் இருந்த அவன் இச்செய்தி கேட்டதும் அப்படிப்பை பாதியிலேயே நிறுத்தினான்.

இவனது பெற்றோரோ காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.அதனால் இவன் பிறக்கும் முன்பிருந்தே இவர்கள் குடும்பத்தை அருகில் இருந்தவர்கள்,சொந்த பந்தங்கள் சற்று இழிவாகவே பார்ப்பனர்.புருசன் ஒரு மூலைல பெண்டாட்டி ஒரு மூலைல இருக்காங்க.இவன்வேற படிப்ப பாதியிலேயே நிறுத்திட்டான்,குடும்பம் சீர்குழைந்துவிட்டது என்று அக்கம்பக்கத்தினர் கேலி கிண்டல் செய்ய தொடங்கினர்.மேலும் தங்கள் பிள்ளைகளிடம் காதல் கீதல்னு எதுவும் பண்ணாதீங்க. பாத்தியா காதல் திருமணம் செஞ்சு இப்ப அந்த குடும்பம் சீர்குழைந்து நிக்குது என்று அறிவுறுத்தினர்.

இவையவற்றையும் அவன் கண்டுக்கொள்ளாமல் அக்காக்களின் அறிவுரைகளையேற்று தன் சுயமுயற்சியால் ஒரு மிகப் பெரிய கல்லூரியில் நுழைவு தேர்விலும் நேர்காணலிலும் தேர்ச்சி பெற்று அக் கல்லூரியில் பயில்கிறான்.
அங்கு சென்றவுடன் சாப்பாட்டிற்கு பணம் அப்பாவிடம் கேட்டால் அம்மாவிடம் கேளு என்றும், அம்மாவிடம் கேட்டால் அப்பாவிடம் கேளு என்றும் மாறிமாறி பேசினர்.பின்னர் இவர்களை எதிர்பாராமல் பகுதிநேர வேலைக்குச் சென்று அவ்வருவாயில் தனது செலவுகளை பார்த்து கொள்கிறான்.இதற்கிடையில் அக்காக்களிடம் இருந்தும் சிறிது பணம் பெற்று கொள்கிறான்.
இவனுடைய கதையை கேட்டு பலர் இவனை தத்தெடுக்க விரும்பினர்.இருப்பினும் இவன் அவற்றையெல்லாம் மறுத்தான்.
இவ்வாறு அவனுக்கு ஊன்றுகோலாய் எந்த சொந்தபந்தமும் இல்லை, அக்காக்களைத் தவிர.

வேறு வேறு வயிற்றில் பிறந்தாலும் தன்சொந்த தம்பி போல் இவனை பார்த்துக்கொண்டனர்.அவன் எப்போதெல்லாம் மனக்கஷ்டபடுகிறானோ அப்போதெல்லாம் ஆறுதல் கூறி அவனை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தனர்.

"நீ எவ்வளவுக்கெவளோ அவமானம் படுறியோ அவளவுக்கவளோ நல்லது நடக்கும்டா தம்பி.நம்பிக்கையோட இரு."
இதனை மனதில் கொண்டு எவ்வளவு துன்பங்கள் இவனை துரத்தினாலும் அதனை பொருட்படுத்தாமல் நம்பிக்கையோடு நகர்ந்து கொண்டே இருந்தான்.
பின்னாடி உனக்கு நல்ல எதிர்காலம், வசதியான வாழ்க்கை அமையும்டா தம்பி. அப்ப உன்ன கேலி கிண்டல் செஞ்சவன் எல்லாம் நாய் மாதிரி உன் பின்னாடியே வருவாங்க.

பின் தன் லட்சியத்தை பல தடைகளை தாண்டி அக்காக்களின் அறிவுரைகளின்படி சாதித்து முடிக்கிறான்.

(அன்று சொன்ன அதே வாய்)

எனக்கு அப்பவே தெரியும்.தம்பி பெரிய ஆளா வருவானு.புத்திசாலியான பையன்ல.


(அப்பா அம்மா சரியில்லனாலும் எப்புடி முன்னேறிருக்கான் பாரு என்று தன் பிள்ளைகளுக்கு அறிவுரைகளை கூறுகின்றனர் அக்கம்பக்கத்தினர்,சொந்தபந்தங்கள்.)

குறிப்பு: எனது சிறுகதை எழுதும் திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.

எழுதியவர் : நிதிஸ் Aj (23-Sep-19, 8:36 pm)
சேர்த்தது : Nithish Aj
பார்வை : 593

மேலே