துள்ளுக்கரா
துள்ளுக்கரா?
@@@@@@@
தவமிருந்து பெத்த உம் பையனுக்கு என்ன பேருடா வச்ச பேரப்பையா?
@@@@@@
தாத்தா, நான் எந்த ஊர்ல வேலை பாக்கிறேன்?
@@@##
ஏன்டா தங்கமுத்து, அதுகூடவா எனக்குத் தெரியாது? நீ கேரளாவில கொச்சில வேலை பாக்கிற. சரி. நாங் கேட்டதுக்கு பதில் சொல்லு.
@@@@
எம் பையன் பேரு துள்கர்.
@@@@@
என்ன பேருடா அது? துள்ளுக்கர்ரா?
@@@@@
நான் மலையாள நடிகர் மும்மூட்டியோட ரசிகன்.
@@@@@
என்னது மம்முட்டியே? தோட்டத்தில பாத்தி போடப் பயன்படுத்தரமெ அந்தப் பேரா ஒரு நடிகரோட பேரு?
@@@@@
ஆமாம் தாத்தா. மம்முட்டி இல்ல மம்மூட்டி. அவுரு பேரு மொகமது குட்டி. சினிமாவில நடிக்க வந்து தன்னோட பேர மம்மூட்டின்னு வச்சிட்டாரு.
@@#@@
சரி அந்த துள்ளுக்கர்ரு?
@######
துள்கர் மம்மூட்டியோட மகன் பேரு. அவரும் நடிகர்தான்.
@@@@##
சரி..சரி..போற போக்கில மம்முட்டி, ,கடப்பாறை, களக்கொத்து, ,அருவாளுன்னெல்லாம் பேரு வச்சுக்கவாங்க போல இருக்குது. உம் பையன் பேரக் கேட்டுட்டு அதே மாதிரி தள்ளுக்கர்ரு, முள்ளுக்கர்ரு, மல்லுக்கர்ரு, பல்லுக்கர்ருனுகூட பேருங்களா பிள்ளைங்களுக்கு வச்சாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல.
@@@@@@
தாத்தா என் பையன் பேரையும் என் அபிமான நடிகர் பேரையும் கிண்டல் பண்ணாதீங்க. 'துள்கர்'-னா 'கடவுள் கொடுத்த பரிசு'ன்னு அர்த்தம்.
@@@@
அப்பீடியா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Tulqer = gift of God