தந்திர உறவுகள்

அன்பு காட்டினால்- அப்பா
அரவணைத்தால்- அன்னை
அள்ளிக்கொடுத்தால்- அண்ணன்
அன்னமிட்டால்- அண்ணி

ஆடிப்பாடினால்- குழந்தை
ஆமாப்ப்போட்டால்- அக்கா
அணைத்தால்- கணவன்
ஆசைகாட்டினால்- மனைவி

ஆதரவுகாட்டினால்- அயலவர்
அடங்கிப்போனால்- மைத்துனி
அடிமையாய் இருந்தால்- மருமகள்
அடக்கமாய் இருந்தால்- மகள்
சீர் கொடுத்தால்- சகோதரன்

அப்பப்பா என்ன தந்திர
உறவுகளடா இது!
உண்மையான உணர்வுகளுக்கு
உருவம் கொடுக்கும் உறவுகள்
உருவாவது எப்போது!

எழுதியவர் : யோகராணி கணேசன் (26-Sep-19, 8:22 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : thanthira uravukal
பார்வை : 1550

மேலே