முகநூல் உறவுகளால் பிரிந்தோம்-சகி
இல்லற துணையை விட
இணையத்தில் தான்
சிலர் துணையை
விரும்புகின்றனர்.....
வாழ்க்கை துணையிடம்
இன்ப துன்பங்களை
பகிர்வதை விட
மாற்றான்
மனைவியிடம்(கணவனிடம்)
அனைத்தும் பகிர
விரும்புகின்றனர்.....
மனைவிக்கு நேரம்
ஒதுக்கி பேசுவதை
விட முன்பின் அறியதவர்களிடம்
அதிகம் நேரம் விரும்பி
செலவிடுகின்றனர்....
ஒருவர் இருவர் என்றல்ல
பல பெண்களிடம்.....
ஏன் மனைவியிடம்
அந்த சந்தோசம்
கிடைக்காதாjQuery17109587832658238749_1569591526973????
உன் கருவை
சுகமாக சுமந்து உனக்கு
இம்மண்ணில் ஆண்
என்ற தகுதியை
வாழ்க்கை பரிசாக கொடுத்தவள்....
மாற்றான் மனைவி
தான் உன் சந்தோசம்
என்றால் உனக்கு
திருமணம் எதற்கு????
தகப்பன் என்ற
தகுதி எதற்கு????
பொறுமை என்பதும்
கொஞ்சகாலம் தான்...
பொறுமை இழந்து
இழந்துவிட்டார்..(இழந்துவிட்டேன்)
பலமுறை கோபத்துடன்
அன்புடனும் உன்னிடம்
முறையிட்டு நீ என்
உணர்வுகளை வெளிப்படுத்தினேன்...
உணரவில்லை நீ...
மதிக்கவில்லை நீ....
நிதானமாக யோசித்து
உன்னைவிட்டு விலகி விட்டேன்...
நிரந்திரமாக.....
என் மனதில் உள்ள
உண்மீதான
காதல் மடிந்து விட்டது....
இனி என்றும்
மலரப் போவதில்லை
நம் இல்வாழ்க்கை....
உன் சந்தோசங்கள்
தொடர என் வாழ்த்துக்கள்....