மழையில் நினைந்த பூக்கள்
மழையில் நினைந்த பூக்கள் ♥️
நதியோர நாணலாக அவள் நடக்க
மலையிருந்து புறப்பட்ட வந்த தென்றல் அவளை தழுவ
சில்லன்ற குளிர் காற்று அவள் மேனியேங்கும் வியாபிக்க
சிலிர்த்து புல்லரித்த மேனியாள் சிந்தனையில் அவள் தலைவன் சட்டென்று நினைவுக்கு வர
கண்கள் மூடி கற்பனையில் அவன் கரம்பிடித்தாள்
தலைவன் அவள் உச்சி முகர்ந்து அவளை ஆர தழுவினான்.
கலைந்து சென்ற மேக கூட்டம் கருமேங்களாக படை சூழ
இடை வளைத்து இளவல் இனியவளின் இதழ் சுவைக்க
காதலால் கண்கள் சொறுக
பளீர் என்று வெட்டிய மின்னல்
திடீரென்று இடித்த இடி
இருவர் இறுக்கத்தை அதிகரிக்க
குலுங்கியது மேகம்
தூரலாக தொடங்கிய மழை கொட்டியது
உலகை மறந்த இரு உயிர்கள்
இயற்கையின் துனையுடன்
இன்பத்தை அள்ளிப்பருக
மாயவனின் கட்டளைக்கு
கட்டுப்பட்டு சிற்றின்ப சாம்ராஜ்யத்தில் சஞ்சரிக்க
சரச சல்லாபங்களின் உச்சம் தொட
மழையில் நினைந்த பூக்கள்
பூத்து மகிழ்ச்சியில் சிரிக்க
கனவில் பயணித்த கன்னி அவள் கண் திறக்க
கண்ணாடியில் அவள் தெரிய
கண் மூடி முகம் சிவந்து வெட்கினாள்.
- பாலு.