அச்சகம் அண்ணனா --உரையாடல் குறுங்கதை

அண்ணன 'அண்ணா' கூப்படறது நம்ம வழக்கம். உம் பையனை 'பிரசுஅண்ணா'னா கூப்படறயு அதுக்கு எனனடா தம்பி காரணம்?
@@@@@@
பாட்டி உலகத் தமிழர்களில் தொண்ணூறு சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் யாருமே அவுங்க பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்கிறதில்லை. உலகம் போற போக்கில போறதுதான் நமக்கு நல்லது.
@@@@@@
இந்தப் பேரை உம் பையனுக்கு யார் வச்சது?
நம்ம குடும்ப சோதிடர் தான். அவன் ராசி, நட்சத்திரப்படி 'பிரசன்னா'ன்னு பேரு வச்சா ரொம்ப செல்வாக்கோட வாழ்வான்னு சொன்னாரு..
@@@@@
சரிடா மருது, இந்தப் பேருக்கு என்னடா அர்த்தம்?
@######
இந்திப் பேருங்களோட அர்த்தம் தெரிஞ்சு பிள்ளைங்களுக்கு பேரு வைக்கிற தமிழ்ப்
பெற்றோர்கள் பதினஞ்சு சதவீதம்கூட இருக்கமாட்டாங்க.
@@@@@@
அது சரி..:'பிரசன்னா' அச்சடிக்கற இடம். அச்சகம். அப்ப உம் பையன் அச்சக அண்ணாவா?
@@@@@@
நான் என்னதக் கண்டேன். நம்ம சோசியருக்கே இந்தப் பேருக்கான அர்த்தம் தெரியாதுன்னு சொல்லிட்டாரு.
●●■■■●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
Prasanna = happy, pleased, cheerful. Indian origin. பெயரடையை (Adjective) பெயர்ச் சொல்லாக (proper nouns)ப் பயன்படுத்துகிறார்கள். தமிழில் பெயரடைகளைப் பெயர்ச் சொற்களாகப் பயன்படுத்தும் வழக்கம் இல்வை என்பதை நாமறிவோம்.

எழுதியவர் : மலர் (27-Sep-19, 8:02 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 65

மேலே