அவள் புன்னகை
அதிகாலை வேளை
பூஞ்சோலையில் எங்கும்
மொட்டுக்கள் தாங்கிய
பூச்செடிகள்-இன்னும்
ஏன் பூக்கவில்லை .....
என்று எண்ணிய நான் அங்கு.....
பூக்கள் பறிக்க வந்தாள் அவள்,
அவள் புன்னகையில்
என்ன மந்திரமோ
மொட்டுக்கள் எல்லாம்
அலர்ந்து அவளை வரவேற்க,
அதைக் கண்டு ஆனந்தம்
அடைந்தாள் அவள்
பூத்து குலுங்கும்
மலரில் எல்லாம் கண்டேனே
நான் இப்போது மங்கை
அவள் புன்னகை