தேடல் பயணம்

அன்பென்றால் என்னவென்று தெரியாமல் இருந்தவனை
ஆர்ப்பரிக்கும் கடல் போல ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தவனை
இமைகளை இமைக்காமல் உன் முகத்திரையை சரி செய்து
ஈட்டி போன்ற உன் கூரீய பார்வையை விழி வழியே வீசி
உன்னையே நித்தம் நித்தம் நிந்திக்க வைத்தாய்
ஊரெல்லாம் சுற்றியவனை சுற்றிவிட்ட பம்பரத்தை போல் உன் நினைவிலே ரிங்காரமிட்டு சுற்றி வர செய்தாய்
என் எண்ணமும் வண்ணமும் நீயே என்று எண்ணும் அளவிற்கு என்னை ஆட்கொண்டு
ஏறிட்டு பார்க்காமல் இருந்தவனை ஏழு சமுத்திரத்தையும் கடந்து வரச் செய்தாய்
ஐந்திணை நிலத்திலும் தேடினாலும் உன் போன்ற ஸ்திரியை ஐம்பெரும் காப்பியங்களிலும் சொல்லவில்லையடி
ஒவ்வொரு சிப்பியாக கடற்கரையில் தேடி அலையும் சிறுவனைப் போல் உன்னைத் தேடி ஒவ்வொரு தேசமாக அலையச் செய்தாய்
ஓயாமல் உன் நினைவிலே உறங்க செய்து ஒய்யாரமாய் என் மன சிம்மாசனத்தை அலங்கரித்தாய்
ஔடதமாய் வந்து என் அகத்தின் உள்ளே குணமாக்கினாய், உன் பெயர் தான் தர்மமோ இல்லை சத்தியமோ......

எழுதியவர் : Anujan (29-Sep-19, 3:56 pm)
சேர்த்தது : Anujan
Tanglish : thedal payanam
பார்வை : 82

மேலே