வாழ்க்கைக்கு சிறப்பு
பெண்ணே!
நானொரு மொட்டை மரம்தான்
இன்று!
ஆனால்,
ஈரப்பசையுள்ள
இளம்பசுமையை உருவாக்கும்
மனம் எனக்கு உண்டென்பதை
வெகுவிரைவில் - உணர்வாய்!
பிறந்த இடமும்
அழகற்ற உருவமும்
பெரிதல்ல என்று நினை!
அதில் உருவாகும் படைப்புகளும்
உன்னதமாய் ஒளிரும் உணர்வுகளும்
உயர்ந்தவையென எண்ணு!
உன் வாழ்க்கை சிறப்பாகும்!