என் சமுதாயம்
சுயநலப் பேய்கள் கொட்டமடிக்கும்
சுடுகாட்டு மனங்களோடு
பிணந்தின்னி கழுகுகளாய்
வாழும் நயவஞ்சக
கூட்டம் நிறைந்த
உன்னத சமுதாயம்..
மேற்கத்திய கலாச்சார போதையில்
ஆடையில் கஞ்சத்தனம் செய்து
கண்களில் காமம் தெளித்துவிட்டு
பார்வையில் விசாலம் வேண்டுமென்று
பேசும் நாகரீகச் சமுதாயம்…
மதுவிலும் மாதுவிலும்
இளமையினை தொலைத்து விட்டு
கால்மேல் கால்போட்டு
பெரியோரை பெருசு
என அழைக்கும்
பண்புள்ள சமுதாயம்…..
தாய் தந்தையினரை பராமரிக்க
முதியோர் இல்லங்கள் கட்டும்
மனிதமுள்ள சமுதாயம்….
அன்பும் அறனும் பண்பும் பாசமும் மனிதமும்
பூத்துக்குலுங்கிய மனங்களை மலடாக்கிவிட்டு
சமூகம் சீரழிந்துவிட்டது என
புலம்பி நிற்கும் என் சமுதாயம்..!