காதல்
கட்டிய மனைவியை வெறும்
காமக்கிழத்தியாய் நினைப்பவன்
காமுகன் கணவன் அல்லன்
காமமே காதல் என்று நினைக்கும்
காதலனும் காதலன் அல்லன் காமுகன்
இனவ்ரிதிக்கு இணைதல் தான் உத்தமம்
செவிக்கு உணவில்லாதபோது சிறிது
வயிற்றுக்கு என்பதுபோல் காம உறவும்
அவ்வண்ணமே வாழ்க்கையில் என்றிருப்பின் உத்தமம்
குழந்தை செல்வம் வேண்டாம் என்று ஒதுக்கி
காமத்தில் இணைதல் கணவன் மனைவி
உறவின் தத்துவம் அறிந்தும் அறியாதவர்
அன்பின் வழியது உயிர்நிலை என்ற
தத்துவத்தில் இயங்குவதே உண்மையான
காதல் வாழ்வு .... காதலுக்கு மறுபெயர் அன்பே