ஓர் காக்கையின் கதை

எனக்கு வாய் கொஞ்சம்
நீளம்தான் - ஆனாலும்
வாய் திறந்து பேசும் போதெல்லாம்
என் பெயரின் முதல் எழுத்த மட்டும்
உச்சருச்சு போதுமுன்னு நிறுத்திடுவேன்....

நிறம் தான் என்னோட அடையலாம்
அதனால இரவானா கஷ்டம்தான்
என்னை கண்டு பிடிகிறது....

கருவேலம் மரமேல
கட்டி வைத்தேன்
கையளவு வீடு ஒன்னு....

வாய் நிறைய குச்சி சுமந்து
வசதியா நான் கட்டிய முதல் வீடு
காற்றுக்கும் கலையாது
கன மழைக்கும் விழுகாது.....

பூமியை சுத்தும்
நிலவாய்
இந்த கருவேலம்
மரத்தை சுத்தியே என் வாழ்க்கை...

என் அழகிய
வீடுக்குள் இட்டு வைத்தேன்
சில முட்டைகளை...

அடை மழையில்
நனைந்து
கடும் குளிரில்
அமர்ந்து
காத்திருந்தேன்
அடை காத்திருந்தேன்....

நாட்கள் ஓட
பசி கூட மறந்து
என் நிறம் கூட வெளுத்துருச்சு....

இட்டு வாய்த்த முட்டையெல்லாம்
என்னை ஏமாத்தி போக
ஒரு முட்டை மட்டும்
என் தவத்திற்கு பலன் கொடுத்துச்சு....

சந்தோசம் தாங்கல
ஊர் முழுக்க பறந்து
வாய் நிறைய இறை எடுத்து
நான் கொடுப்பேன் என் குஞ்சுக்கு....

நாட்கள் போக
என் கொஞ்சுக்கு இறகெல்லாம் முளைக்க
அது பறக்க
நான் பறந்து கத்து கொடுப்பேன்....

ஒரு நாள் பேச கத்து கொடுக்க
நான் கா கா கா கத்துனா
அது கூ கூ கூ கத்தி பறந்துருச்சு.....

எழுதியவர் : பாலமுதன் ஆ (10-Sep-11, 4:12 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 348

மேலே