அம்மா நீ வேண்டும் ....2

வகை வகையாய் உணவு
செய்து ஊட்டி விட்ட என் அம்மா..

உனக்கோர் வாய் நான் ஊட்ட
நீ வேண்டும் என் அம்மா..

என் அழுக்கை அலுக்காமல்
கழுவி விட்ட என் அம்மா..

உன் வலக்கைக்கு தங்கக்காப்பு
நான் தாரேன் என் அம்மா..

சிறு குளிரும் நான் தாங்கா
போர்வையானால் என் அம்மா..

பட்டு வண்ணச்சேலை ஒன்று
வாங்கித்தாரேன் என் அம்மா..

உன் தோளில் தாங்கி தினம்
எனை வளர்த்த என் அம்மா..

ஓர் வைர மாலை உனக்கே
சூட நீ வேண்டும் என் அம்மா..

ஓர் தவறு நான் செய்தால்
கில்லி வைத்த என் அம்மா..

நீ கேட்டால் எதை நானும்
அள்ளித்தாறேன் என் அம்மா..

இவ்வுலகில் எதிலேனும்
சுகமில்லை என் அம்மா..

உன் காலடியே சுவர்க்கம் என்பேன்
நீ வேண்டும் என் அம்மா..




எழுதியவர் : தோழி.. (10-Sep-11, 2:38 pm)
சேர்த்தது : faheema
பார்வை : 670

மேலே