கண்ணுகுழி

ஆற்று தண்ணீர் பாறையில் மோதுவது போல
அழகாய் மோதும் அவளின் சேல
பார்க்கும் பார்வை பல்லாங்குழி போல
துள்ளி ஓடும் பாத கண்ணுகுழி மேலே
இதமாய் பேசும் தமிழைப் போல
மனம் சிறகாபறக்கும் வானம் மேல
இவளின் சிரிப்பில் அடங்கும் முரட்டு காள
இவள் பாதம் பட்டால் மலரும் சால
கொலுசு சத்தம் மயக்கும் ஆள
இவ கழுத்தால் அழகாகும் மால

எழுதியவர் : த.வே.தமிழன்பன் (3-Oct-19, 2:44 pm)
பார்வை : 267

மேலே