என் செல்ல குட்டிமா
பேசும் கவிதையே
நீ எங்கள் தாரகை
நீ கொஞ்சி பேசினால்
என் நெஞ்சில் அடை மழை
தாய் நியாபகம் வருகையில்
உன்மடி சாய்குவேன்
என் தாயின் சாயலை உன்னில்நான் பார்க்கிறேன்
உன் சில சொல் கேக்கையில் விரியும் என் சிறகுகள்
நடந்தே பார்க்கிறேன் கனவிலும் சிரிக்கிறேன்
மறுஜென்மம் என்பதில் நம்பிக்கை எனக்கில்லை
இந்த ஜென்மமே நிலையென கருதி உன்னை கேக்கிறேன்
சில கனம் சேயாய்
சில கனம் தாயாய்
உன்னை நான் வேண்டுவேன்
கிடைக்குமா ஒரு வரம்
வேண்டினேன் ஒரு தரம்
பிழைக்குமா என் உயிர்
உன்னோடு நனைந்திட கிடைக்குமா
எனக்கு மீண்டும் ஒரு தாய்மடி