ம முதல் சொல் கவிதை
மருத்துவம் எல்லாம்
போலியாய்ப் போனதே/
மருத்துவர்கள் எல்லோரும்
எமனாய்ப் போனார்களே /
மருத்துவமனையில் மர்மக்
கொலை தொடர்கின்றதே/
மக்களின் நெஞ்சமோ
பயத்தின் எல்லையிலே/
மனமோ பதறுது
கதறுது நோக்கையிலே/
மகப்பேறு விடுதியும்
தூமையின்மைக் காட்சியினிலே/
மனிதம் மரணித்த
தாதியர்களின் அட்டகாசத்தாலே/
மனநோயாளியாய் மாறுகின்றனர்
கர்ப்பிணித் தாய்களுமே/
மதிப்பற்றுப் போகின்றது
தாயின் உணர்வானது
மறைக்கப் படுகின்றது
அரங்கேறும் நிகழ்வுகள்/