அமாவாசையாய்

நிலவைத் தொட்டுத் திரும்பும்
என் நனைவுகள்

உன்னையும் தொட்டுத் திரும்ப
எனக்கு மிஞ்சியது

ஏமாற்றம் தான் உன்னைக்
காணாது

தேய்பிறையில் கூட தொலைவே
உள்ள

நிலவை ஒருநாள் தவிர

கண்டுவிடுகின்றேன் தவறாது

அருகேயிருந்தும் நீ மட்டும்
எனக்கு

என்றும் அமாவாசையாய்..,

எழுதியவர் : நா.சேகர் (11-Oct-19, 11:58 am)
Tanglish : amaavaasaiyaay
பார்வை : 156

மேலே