காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல 555

காதல்...


எனக்கு பிடித்த அவளுக்கு

காதல் கடிதம் எழுதினேன்...
வார்த்தைகளும் வரவில்லை

கையெழுத்தும் அழகாய் இல்லை...


எத்தனையோ காகிதங்களை

கசக்கி எறிந்தேன்...


சொற்களும்

சிதறி கிடக்கிறது...
கோர்க்க தெரியவில்லை

கோர்வையாக எனக்கு...


என் காகிதங்களும்

சிதறிகிடக்கிறது...


அழகாய் வெண்மையாக இருந்த

காகிதம் கசக்கி எறிந்தேன்...


அழகாய் இருந்த என் தலையெழுத்தும்

ஏனோ இன்று கிருக்களாக...


கற்பனையில்

அவளுடன் வாழ்ந்தேன்...


நிஜமான என் வாழ்க்கையை

தொலைத்தேன்...


காதல் வாழ்க்கையின்

ஒரு பக்கம் மட்டுமே...


காதலே வாழ்க்கை அல்ல.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (12-Oct-19, 3:58 pm)
பார்வை : 177

மேலே