மணலைக் காணோம்

அய்யா, அய்யா.
ஆய்வாளர் அய்யா
எங்க பொண்ணு
செல்லப் பொண்ணு.
அவள் பேரு மணல்
நேற்று இரவு முதல்
அவளை காணவில்லை அய்யா.
@@@@@
வயது என்ன அவளுக்கு?
@@@@@@@@
இருபது வயது அய்யா
தங்கச் சிலைபோல இருப்பாள்!
@@@@#
புகைப் படத்தைக் காட்டுங்கள்
புகாரையும் கொடுங்கள்.
@@@@@
பெற்றுக் கொள்ளுங்கள்
ஆய்வாளர் அய்யா.
@@@@@@
நீ யாரய்யா ஓடிவருகிறாய்?
@@@@@@
அய்யா, அய்யா
ஆய்வாளர் அய்யா
என் பெயர் ஏழுமலை
இதோ இங்கு நிற்கும்
மல்லிகா வீட்டிற்கும்
பக்கத்து வீட்டுக்காரன்
@@@@@@
உமது புகார் என்னய்யா?
@@@@@
எனது மகன் சணல்
ஆண் சிங்கக் குட்டி
இருப்பத்தி இரண்டு வயது
நேற்று இரவு முதல் அவனைக்
காணவில்லை அய்யா.
மல்லிகாவின் மகள்
கண்ணடிக்கும் ஜாலக்காரி
அவள் தான் என் மகனை
இழுத்துக் கொண்டு
ஓடியிருப்பாள்
இதுவே உண்மை.
@@@@@@
மணலின் புகைப்படமே சாட்சி
அவள் ஜாலக்காரி போலிருக்கும் காட்சி
ஓடிப் போன மணலையுய்
சணலையும் கண்டுபிடித்து
இழுத்து வந்து இக்காவல்
நிலையத்தில்
பதிவாளரை அழைத்து வந்து
மணமுடித்து வைப்பான்
இந்த ஆய்வாளர் ஆளவந்தான்.

@@@@@@@
மல்லிகா ஏழுமலை இருவரும்
செல்லுங்கள் வீட்டுக்கு இப்போ
சம்பந்திகள் ஆகிவிட்ட
சந்தோசத்துடன்!
"■■■■◆◆◆◆■◆■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Manal = Bird. Arabian, Indian origin.
Sanal = Vigorous

எழுதியவர் : மலர் (11-Oct-19, 6:59 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 46

மேலே