பூவினம்

பூவினம்

நல்லவேளை...
பிறக்கவில்லை
பாவப்பட்ட
பெண்டினமாய்...

என
நிம்மதி கொள்கிறோம்
பட்டு போன்ற
எங்கள்
ஒட்டு மொத்தப் பூவினம்!

பண்டுமுதலாய்
தொன்றுதொட்டு...

இதுவரை
கண்களில் பட்டதில்லை!

இருப்பதாய்
கேள்வி்யும் பட்டதில்லை!

இளம் மொட்டுக்கள் குதறும்
குரூரக் கொடூர
கேடு கெட்ட வண்டினம்!

எழுதியவர் : Usharanikannabiran (12-Oct-19, 10:05 am)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : poovinam
பார்வை : 68

மேலே