இயற்கை

ஓவியன் நான்
அந்திசாய் வேளையில்
இயற்கை ஓவியம் வரைந்திட வேண்டி
'வரை கான்வாஸ்' இத்தியாதிகளுடன்
ஆற்றங்கரை மணலில் காத்திருக்க
மனதில் புதிய எண்ணம் தோன்றாது
காத்திருந்தேன்..... என்னை முந்திக்கொணடது போல்........
ஓடும் மேகக்கூட்டங்கள் அழகான
வண்ண ஓவியம் ஒன்றை வானில் பதித்துவிட்டு
போனது..... எகிப்தின் 'பிரமிட்' ஒன்றை வரைந்து
அதன் கீழ், பாதையில் ஒட்டகத்தின் மேல் மனிதன்
ஒருவன் பயணிப்பதுபோல் ......
ஒரு மேகத்தில் குடைந்தெடுத்த ஓவியம்......
ஓடும் மேகக்கூட்டம் வரைந்து சென்றது..
அதைப் பார்த்து வாயடைத்துப்போன நான்
அதையே மனதில் ஏற்றி , என் வரைபடமாக
அமைத்தேன் .......
இயற்கைக்கு நன்றி சொன்னேன்
இயற்கை வானில் பதித்த ஓவியம்
வானவில்போல் காணாமல்போனது , மறைந்தது..
அது என் மனதில் ஏற்றிய ஓவியம் இப்போது..


இதோ உங்கள் முன்னால்.... என் கைவண்ணமாய்

இயற்கை வானில் பதித்த ஓவியமே இது
இயற்கைக்கு நன்றி சொல்வேன் நான்
.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Oct-19, 2:03 pm)
Tanglish : iyarkai
பார்வை : 379

மேலே