அவன்

இனிய கனவொன்று கண்டேனடி
அதில் அவன் 'உன்னை கட்டிப்பிடிப்பேன்
முத்தம் கொடுப்பேன் என்றெல்லாம் கூறாது
பெண்ணே' உன் மீது எனக்கு காதல்',
நீயும் என்னை காதலிப்பாயா என்று மட்டுமே
கேட்டு மறைந்தான் ...... அவன் கண்களிலும்
நான் கண்டேன் நாணயம் .... என்னை நாணவைக்க
துயிலிலிருந்து மீண்டேன்.......... காவியத் தலைவன்
கனவில் வந்த அவன் என் முன்னே ....
என் வீட்டிற்கு குடிபுக வந்த வாடகைக்காரனாய்,
அவன் அறியான் அவன் என்னுள்ளத்தில்
நேற்றே புகைந்துவிட்டான் காதலனாய் கனவில் என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Oct-19, 8:00 pm)
Tanglish : avan
பார்வை : 84

மேலே