நினைவில்
எதனை எழுத?
மொழிகளுக்குள் அடங்கிவிடும்
சாதாரணமானவளா நீ?!
உன்பெயர் எழுதிப்பார்த்தால்
பேனாமுனையில்
பூப்பூக்குதென பொய்கூற
விரும்பவில்லை-எனினும்
உன்பெயர் தாங்கிய தாள்கள்
பூக்களைவிட
மதிப்பானவை..
இமைக்காமல் உனை பார்த்திட
ஆசைதான்.. இமைக்குள்
சிறைகொண்டெடுக்கும் பேராசையில் இமைத்திடுகிறேன்
இப்போதைக்கு முடிக்கிறேன்
உன்.நினைவுகளில்
மூழ்கிட வேண்டி..