இளங்குழந்தையின் ஏக்கம்!!
சுகந்தம் சுமக்கும் பூக்கள்...
தேன் தேடும் வண்டுகள்...
பனித்துளிக்கு பாய் விரித்த பச்சைகள்...
இதமான குளிர் காற்று...
விடியலின் இளைய சூரியன்...
மங்கிய காலை கண்ணோட்டம்...
இயற்கையின் இயல்பில் இலயித்திருக்க
இயலாது போய்விடுமோ...
இனி வரும் நாட்களில்...?
ஏங்குகிறது...
இன்று பிறந்த...
ஓர் இளங்குழந்தை!!