பாரதப் புத்திரர்கள் ...............!
இவர்கள்
இலவசங்களுக்கு தங்களை
தொலைத்தவர்கள்................
நாக்கில் தடவும்
வார்த்தை இனிபுக்களுக்காய்
வாழ்கையை தொலைத்தவர்கள்....
பறக்கும் கட்சி கொடியைப் பார்த்து
கட்டிய கோவணத்தை
தொலைத்தவர்கள்................
திருவோட்டை ஏந்திய
வரிகட்டும் வள்ளல்கள்
அரசியல்வாதிகளின்
ஆதிக்க கொத்தடிமைகள் .
கொள்கை இல்லா அரசியல்
கட்சிகளுக்கு நிரந்தரமாய்
பறக்கும் கட்சிக்கொடி
தோரணங்கள்...............
இந்திய தேசத்தின்
நிரந்தர பிச்சைக்காரர்கள் ......!
ஜாதி மதக் காலச்சாரத்தின்
ஜால்ராக் கூட்டங்கள்.......
கையில் இருக்கும் ஓட்டை
கலவாணிக்குப் போட்டுவிட்டு
திருவோட்டை ஏந்திய
திருந்தாத மக்கள் ..................!
அடுத்தவனை குறை சொல்லியே
தனக்கு குழியை தோண்டிக் கொண்டவர்கள்
கண் இருந்தும் குருடர்கள் ...................
பாரத தேசத்தின் வறுமைக் கோட்டை
வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் ...
நம் பாரதப் புத்திரர்கள்.................!